16.12.13

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் குறித்து 8 ஆவணப்படங்கள்

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அந்நாட்டு ராணுவம் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் போர் குறித்து 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளது.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த தகவலை அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ருவான் வாணிகசூரிய தெரிவித்தார். இலங்கை ராணுவம் தயாரித்துள்ள இந்த 8 ஆவணப்படங்களும், வெளிநாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள நாட்டு அரசுகளிடம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக பிரிட்டனின் சானல் 4 மற்றும் பிற தரப்பினர் மேற்கொள்ளும் தவறான பிரசாரம் உண்மையில்லை என்பதை இந்த ஆவணப்படங்கள் நிரூபிக்கும் என்றும், விடுதலைப்புலிகள் புரிந்த பல்வேறு தவறுகளை உலக நாடுகள் அறிந்து கொள்ள உதவும் என்றும் ருவான் வாணிகசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment