நாகை மாவட்டம் கோடியக்கரையில் ஆளில்லாத படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதி கடற்கரையோரத்தில் மூங்கில்களால் செய்யப்பட்ட ஓர் மர்மப் படகு கரை ஒதுங்கியிருப்பதாக அப்பகுதி மீனவர் ஒருவர், வனத் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் அளித்தார்.
இதையடுத்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி, வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன், சுங்கத் துறை அதிகாரிகள் சென்று அந்தப் படகை பார்வையிட்டனர். மூங்கில் மரங்களால் செய்யப்பட்டிருந்த அந்தப் படகு சுமார் 35 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இந்தப் படகின் மையப் பகுதியில் சுமார் 5 அடி உயர கூரை அமைக்கப்பட்டிருந்தது. என்ஜின் இல்லாத இந்தப் படகு, மியான்மர் நாட்டைச் சேர்ந்தது எனத் தெரிய வந்தது. அண்மையில் வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சீற்றம் காரணமாக இந்தப் படகு கரை ஒதுங்கியதா? அல்லது அன்னிய நபர்களின் ஊடுருவலுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment