16.12.13

"சுதந்திரப் போராட்டப் பெருமையை தட்டிப் பறிக்க பாஜக முயற்சி'

சுதந்திரப் போராட்டப் பெருமையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் முறையற்ற வகையில் பறிக்க முயல்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைகூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இமாசலப் பிரதேச மாநிலப் பிரிவு சிம்லாவில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தியைக் கொலை செய்ததற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சர்தார் வல்லபபாய் பட்டேல் தடை செய்தார். இப்போது அந்த அமைப்பு வரலாற்றைத் திரிக்கவும், சுதந்திரப் போராட்டத்தில் தனக்குப் பங்கு இருப்பதாகக் கூறி அந்தப் பெருமையை தட்டிப் பறிக்கவும் முயல்வது முரண்பாடாக இருக்கிறது.
"ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் ஆதரவு பெற்ற ஜன சங்கமும் இப்போதுள்ள மதச்சார்பற்ற சுதந்திர அமைப்பை எப்போதும் ஆதரித்ததில்லை. அவை, இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக உருவாக்கவே விரும்புகின்றன.
சர்தார் படேல் சிலை அமைப்பு என்பது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் என்று சித்தரிக்கப்படுகிறது. இதற்காக, நாடு தழுவிய ஓட்டம் என்று கூட்டத்தைக் கூட்டுவது என்பது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு செங்கற்களைத் திரட்டுவதாகக் கூறி மதவாதம் பரப்பப்பட்டதை ஞாபகப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment