16.12.13

"பொது இடத்தில் இந்திய தூதர் கைது செய்யப்பட்டது அவமரியாதை'


அமெரிக்காவில், இந்தியத் தூதரான தேவயானி கோப்ரகடேவை பொது இடத்தில் வைத்து கைது செய்தது அவமரியாதையான செயல் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம் ஃபர்குஹாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியத் தூதர் இவ்வாறு கைது செய்யப்பட்டதை அவமரியாதையாக நாங்கள் கருதுகிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அமெரிக்கா பதிலளித்த பிறகு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குர்ஷித் கூறினார்.
வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தேவயானி, நியூயார்க் நகர வீதியில் கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment