5.12.13

இணையத்தின் மூலம் ரூ. 45 கோடி மோசடி: ஆசிரியர் பிடிபட்டார்

இணையத்தின் மூலம் ரூ. 45 கோடி மோசடி செய்ததாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆசிரியர் திருவாரூரில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டார்.
நாகை மாவட்டம், ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தாவுத்கான் மகன் அக்பர் அலி (34). இவர் ஏனங்குடியிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே, தான் ஒரு பெரிய நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் பங்குதாரராக சேர்ந்தால் செலுத்தும் பணத்துக்கு இரட்டிப்புத் தொகை கொடுக்கப்படும் என்று இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டார்.
இதனை நம்பி ஏனங்குடி, கேதாரிமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புறப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.45 கோடி வரை பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு அக்பர் அலி தலைமறைவாகி விட்டார்.
பணம் செலுத்தியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து அக்பர் அலியை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவாரூர் நகர போலீஸார் வாழவாய்க்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த அக்பர் அலி பிடிபட்டார். பின்னர் அவர் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அக்பர் அலி ஒப்படைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment