5.12.13

தகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம்

பெறுநர்
மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி
எந்த அலுவலகம் அல்லது எந்தப் பிரிவிலிருந்து
தகவல் அறிய விரும்புகிறீர்களோ அந்த அலுவலகத்தின் முகவரி.

விளிப்பு : ஐயா / அன்புடையீர்
கீழுள்ள கேள்விகளுக்கான தகவல்களைத் தயை கூர்ந்து அளிக்கவும்.
கேள்விகள் குறிப்பாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும்.
௧.
௨.
௩.
க்ட்ணமாக ரூபாய்10க்கான இந்திய அஞ்சல் ஆணை இணைத்துள்ளேன்.
தயவு செய்து இந்த அஞ்சல் ஆணையை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு
அனுப்பி வைக்கவும்.
விரைவான தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கும்
தங்களின் உண்மையுள்ள



(விண்ணப்பதாரரின் கையொப்பம்)
விண்ணப்பதாரரின் பெயர் மற்ற்றும் முகவர்ரி:

விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை உங்கள் கைவசம் இருக்கட்டும்.
30தினங்களுக்குள் பதில் வராவிட்டால், முதல் மேல் முறையீட்டு மனு அதிகாரி
ஆர்.டி.ஐ. அதிகாரி2005 க்கு முறையீடு செய்யவும்.

பெறுநர்
முதல் மேல் முறையீட்டு அதிகாரியின் பெயர் மற்ரும் முகவரி
விளிப்பு
அன்புடையீர்!
சம்பந்தப்பட்ட பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து இத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் நகலில் உள்ள தகவல்களைக் கேட்டிருந்தேன். 30நாட்கள் காலக் கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து பதில் வரவில்லை. எனவே இந்த மேல்முறையீட்டைத் தஙளுக்கு அனுப்பியுள்ளேன். ஆவன செய்யவும்.

இதே போல் இரண்டாம் மேல் முறயீட்டையும் செய்யவும்.

இறுதியாக, மத்திய/ மாநில தகவல் ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.ஆணையர் இதில் சம்பந்தப்பட்டவர்களை -பொது தகவல் அதிகாரி, முதல் மேல்முறையீட்டு அதிகாரி, இரண்ட்டாவது மேல் முறையீட்டு அதிகாரி மற்றும் விண்ணப்பதாரர்கள அழைத்து விசாரிக்கலாம்.

விசாரணைக்குப்பின் ஆணையர் தனது தீர்ப்பை வழங்குவார்.

அரசு அலுவலகங்களில் தகவல்தரும் அதிகாரியின் பெயர் எல்லோருக்கும் தெரியுமாறு எழுதப்பட்டிருக்கும்.

30நாட்களுக்குள் பதில் தந்தாக வேண்டும்.

அவசரத் தேவைகளுக்கு 24மணிநேரமே கால அவகாசம்.

படிப்பறிவில்லாதவர்களுக்கு அதிகாரியே விண்ணப்பம் எழுதித் தரவேண்டும்.

12000க்குக் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.

குறித்த காலத்திற்குள் தகவலைத் தராத அதிகாரிக்கு அபராதம் உண்டு. அவரது சேவைக்குறிப்புப் (சர்வீஸ் ரிகார்ட்ஸ் ) புத்தகத்திலும் பதிவாகும்.

ஒரே அதிகாரியிடம் ஒரு காரியத்திற்காக மீண்டும் மீண்டும் அலைவதைவிட 60நாட்களுக்குள் ஒரு பதில் கிடைப்பதற்கான வாய்ப்பினை இந்தச் சட்டம் தருகின்றது. லஞ்சத்தையும் தவிர்க்கின்றது.

மக்கள் நலனுக்கான இந்தச் சட்டம் மதிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment