5.12.13

ஒவ்வொரு குழந்தைக்கும் இசைக் கல்வி முக்கியம்! - ஏ ஆர் ரஹ்மான்

மன்ஹாட்டன்: ஒவ்வொரு இந்தியக் குழந்தைக்கும் இசைக் கல்வி மிக முக்கியம். அதற்காக என்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என்றார் ஏஆர் ரஹ்மான்.
ஆஸ்கர் விருதுபெற்ற தமிழ் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரிலுள்ள மிகப் பிரபலமான ஆடியோ மற்றும் இசைக் கருவிகளை விற்பனை நிறுவனமான ஹார்மென் இண்டர்நேஷனல் ஸ்டோருக்குச் சென்றிருந்தார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் இசைக் கல்வி முக்கியம்! - ஏ ஆர் ரஹ்மான்

அங்கு ஏராளமான இந்திய, வெளிநாட்டு ரசிகர்கள் ரஹ்மானைச் சந்திக்க கூடியிருந்தனர்.
அப்போது, ஹார்மென் இண்டர்நேஷனல் சி.இ.ஓ. தினேஷ் பாலிவால், தங்க மூலாம் பூசப்பட்ட ஜே.பி.எல். ஹெட்போனை அவருக்கு பரிசாக வழங்கினார். மேலும், ஹார்மென் கம்பெனியின் இந்தியாவிற்கான விளம்பர தூதுவராக ரஹ்மான் இருப்பார் என்றும் அவர் கூறினார்.
அங்கு கூடியிருந்தோர் மத்தியில் ரஹ்மான் பேசுகையில், இசைக்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவர் கூறுகையில், "ஒரு வீட்டில் இசைப் பயிற்சி எடுப்பதால் மட்டும் அந்தக் குழந்தை இசையை நன்றாக கற்றுகொள்கிறது என்று அர்த்தமல்ல. ஒரு குழந்தை நன்றாக இசை கற்கிறது என்றால் அவனுக்கு இசையை பற்றிய சரியான கல்வி அறிவும் இருக்கிறது என்று அர்த்தம்.
எனது இசைப் பள்ளி முயற்சி, இசைக் கல்வியைக் கற்கும் முனைப்பை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியிருப்பதை உணர்கிறேன். அதற்கான ஊக்கம் அவர்கள் மத்தியில் தெரிகிறது.
துபாய், மலேசியா நாடுகளிலும் இசைப் பள்ளியை தொடங்குவதற்கு நடவடிக்கைகளில் இறங்கியுள்லளேன்.
என்னை பொறுத்தவரை ஒரு இசைப்பள்ளி என்பது ஒரு குடும்பத்தை போன்றது. இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் இசைக் கல்வி பெற வேண்டும் என விரும்புகிறேன்.
எந்த குழந்தையும் தானாகவே வளரும் என்று என்று விட்டுவிடமுடியாது. நீங்கள் அவர்கள் மீது கவனம் கொள்ள வேண்டும். அதையே நீங்கள் இசைப்பள்ளியிலும் பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் கே.எம். மியூசிக் கன்சர்வேடரி என்ற இசைக் கல்வி நிறுவனத்தை ரஹ்மான் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையிலும், புறநகரிலும் இந்த இசைக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment