1.12.13

போலி வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிப்பு: ஹரியாணா அமைச்சர் மீது வழக்குத் தொடர உத்தரவு

போலி வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ஹரியாணா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு குர்கான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் கட்டாரியா என்பவர், குர்கான் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்பீர் கட்டாரியாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், 2009ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு போலியான வாக்காளர் அடையாள அட்டைகளை சுக்பீர் கட்டாரியா தயாரித்துக் கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குர்கான் நீதிமன்றம், சுக்பீர் கட்டாரியா மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. மனுதாரரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக குர்கான் நகர காவல்துறை உதவி ஆணையர் நரேந்தர் காடியன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு ஆணையிட்டது.

No comments:

Post a Comment