3.12.13

பணத்துக்காக எதிர்காலத்தை விற்காதீர்: தேர்தல் ஆணையம் எஸ்.எம்.எஸ். பிரசாரம்


இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஏற்காடு தொகுதியில், "பணத்துக்காக எதிர்காலத்தை விற்காதீர்' என்று வாக்காளர்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் தகவல் அனுப்பி தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் முடிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் செல்போன் எண்களை பதிவு செய்துள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் அவர்களது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை எண், பகுதி எண் மற்றும் வரிசை எண் ஆகிய விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், வாக்குக்கு பணம் (வாங்க) வேண்டாம்- பணத்துக்காக உங்கள் எதிர்காலத்தை விற்காதீர் என்று வாக்காளர்களை வலியுறுத்தி குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு லஞ்சம் பெற்றாலோ அல்லது கொடுத்தாலோ ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன என்று பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment