13.12.13

ரஜினியின் சிறந்த வசனங்கள்... இதெப்டி இருக்கு!




சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு விதத்தில் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்கள்.
ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு சிறப்பான விஷயம் அதில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரஜினி, அதற்காக தானே சிலவற்றைச் சேர்ப்பதும் உண்டு.
ஹவ்வீஸ் இட் தொடங்கி, அந்த கதம் கதம், லகலகலக வரை சொல்லிக் கொண்டே போகலாம்.
அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
இதெப்டி இருக்கு!
ரஜினிக்கு அவரது முதல் படத்தில் அவ்வளவாக வசனங்களில்லை. ஆனால் இரண்டாவது படமான மூன்று முடிச்சு தொடங்கி வசனங்களில் பின்னியிருப்பார். ரஜினி நடித்த பதினாறு வயதினிலேவில் அவருக்கு வில்லன் வேடம். சில காட்சிகள்தான். ஆனால் பளிச்சென்று தெரிவது அவர்தான். குறிப்பாக அந்த வசனம் 'இதெப்டி இருக்கு!'
சீவிடுவேன்...
முரட்டுக்காளையில் ரஜினியின் புகழ்பெற்ற வசனம் 'சீவிடுவேன்!' பின்னாளில் எந்திரன் படத்தில் இதே வசனத்தை ரஜினி எதிரில் கலாபவண் மணி பேசிக் காட்டுவார்!
ஹவ்வீஸ் இட்...
இது வீராவில் ரஜினி பயன்படுத்திய முத்திரை வசனம். அதை அவர் உச்சரித்த அழகே தனி.
நான் ஒரு தடவ சொன்னா...
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற வசனம், 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..'. பாட்ஷாவில் இடம்பெற்ற இந்த வசனம் கிட்டத்தட்ட ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது.
ஆண்டவன் சொல்றான்...
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்... இது அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற படு பாப்புலர் வசனம். நான்கு வார்த்தைகளுக்குள் ஏகப்பட்ட அர்த்தங்களை உள்ளடக்கிய வசனம் இது.
என்வழி தனீ வழி...
படையப்பாவில் இடம்பெற்ற இந்த வசனத்தை ஒவ்வொரு முறை சொல்லும்போதும், ஆங்கிலத்தில் ஒரு இணை வசனத்தைச் சொல்வார் ரஜினி. வெகு ஈர்ப்புடன் அமைந்த வசனம்.
நான் எப்போ வருவேன்...
முத்து படத்தில் காட்சியோடு இணைந்து வரும் 'நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்," என்று ரஜினி பேசியதற்கு பல அரசியல் அர்த்தஙக்கள் கற்பிக்கப்பட்டன. இன்னும் கூட இந்த வசனம் உயிர்ப்புடன்தான் உள்ளது!
கதம் கதம்
பாபா படத்தின் இந்த வசனத்தை, அந்தப் படம் வெளியானபோது பிறந்திருக்காத சின்னஞ்சிறுசுகளும்கூட இன்று பாபா முத்திரையுடன் சொல்லிக் காட்டுவதே இந்த வசனத்தின் சிறப்பு.
லகலகலக...
இது ஒரு வசனம்கூட இல்லை. தன் எள்ளலைக் காட்ட ரஜினி பயன்படுத்திய ஒருவித ஒலி. அதற்குக் கிடத்த வரவேற்பு வரலாறு காணாதது.
ச்சும்மா அதிருதில்ல...
சிவாஜியில் இடம்பெற்ற வசனம் இது. நிஜமாகவே சினிமாவை அதிரவைத்தது, அதன் வீச்சு.
அடேங்கப்பா...
பல படங்களில் ரஜினி இந்த சொல்லைப் பயன்படுத்தும் விதம், அதை உச்சரிக்கும் தொனி... அடேங்கப்பா!

No comments:

Post a Comment