ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் பலமாக மோதியதில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. இதனால் மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதியிலிருந்து அதிகப்படியான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ராமேசுவரம் கடல் பகுதியில் அலைகள் வேகமாக வந்து மோதியதில், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment