14.12.13

கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம்: பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக நந்தனம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலூரைச் சேர்ந்தவர் நேசக்குமார் (20). இவர் நந்தனம் அரசு கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை ஓட்டேரி பஸ் நிறுத்ததில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தர் மர்ம நபர்கள், நேசக்குமாரிடம் தகராறு செய்தனராம்.தகராறு முற்றவே அந்தக் கும்பல், நேசக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.இதில் காயமடைந்த நேசக்குமார், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாநிலக் கல்லூரி மாணவர்கள் சீரஞ்சீவி, கலைச்செல்வன், ரியாஸ், குமாரவேலு, ராமு, பார்த்தீபன்,விஷால்,குமரவேல் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டையில் கைது:
சுங்கச்சாவடியில் இருந்து திருவான்மியூருக்கு வியாழக்கிழமை காலை சென்ற ஒரு மாநகரப் பேருந்தில் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இருந்தனர். இந்தப் பேருந்து வண்ணாரப்பேட்டை மார்க்கெட் நிறுத்ததில் நிறுத்தப்பட்டபோது, திடீரென ஒரு கும்பல் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் பேருந்துக்குள் ஏறியது.
அப்போது பஸ்ஸில் இருந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள், மணலியைச் சேர்ந்த ராஜா, பி.எஸ்.சி. இரண்டாமாண்டு படிக்கும் அத்திப்பட்டைச் சேர்ந்த சரத்குமார், பி.ஏ. மூன்றாமாண்டு படிக்கும் மீஞ்சூரைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் கத்தியால் தாக்கப்பட்டனர். மேலும், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார், கௌரி ஆகிய இரு பயணிகளும் தாக்கப்பட்டனர்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர். இது தொடர்பாக மூலகொத்தளத்தைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திவாகர் (22), நாகராஜ் (22), சுப்பு என்ற சுப்புராஜ் (23) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment