14.12.13

பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 24 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு விருது: முதல்வர் வழங்கினார்

முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்ததில் முதலிடத்திற்கான கேடயத்தை முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து வெள்ளிக்கிழமை பெறும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் கு.ஞானதேசிகன்இரண்டாம் இடத்திற்கான கேடயத்தை பெறும் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர்.
மூன்றாம் இடத்திற்கான கேடயத்தை பெறும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பி.சந்திரமோகன்.

பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 24 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்-காவல் துறை உயரதிகாரிகள் மாநாட்டில் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். அதன் விவரம்:
முதல்வரின் தனிப் பிரிவுக்கு வந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்காக கேடயம்:
முதல் பரிசு: கரூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜெயந்தி, இரண்டாம் பரிசு-திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், மூன்றாவது பரிசு-திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன்.
போலீஸ் அதிகாரிகள்: முதல் பரிசு-திருவாரூர் எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமார், இரண்டாவது பரிசு-சிவகங்கை எஸ்.பி., அஸ்வின் எம்.கோட்னிஸ், மூன்றாவது பரிசு-வேலூர் எஸ்.பி., பி.விஜயகுமார்.
மாநகர காவல் ஆணையகர வரிசையில், முதல் பரிசு-மதுரை மாநகரம்-ஆணையாளர் சஞ்சய் மாத்தூர்.
அரசுத் துறைகள்: முதல் பரிசு-தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் கு.ஞானதேசிகன், இரண்டாவது பரிசு-சென்னை மாநகராட்சி ஆணையாளர் விக்ரம் கபூர், மூன்றாம் பரிசு-சென்னை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் பி.சந்திரமோகன்.
மாண்புமிகு முதலமைச்சரின் மின்ஆளுமை விருது: முதல் பரிசு-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஷ் அஹமது, அரசுத் துறை-வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான கேடயம்: தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால்.
மாற்றுத் திறனாளிகள் நலனில் சிறப்புக் கவனம் செலுத்திய ஆட்சியர்களுக்கு 10 கிராம் தங்க நாணயம், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு.
முதல் பரிசு-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஷ் அஹமது.
இரண்டாம் பரிசு-திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சி.சமயமூர்த்தி.
மூன்றாவது பரிசு-கரூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜெயந்தி.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம்: வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் நீலகிரி மாவட்ட இப்போதைய ஆட்சியருமான பி.சங்கர், தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கான பசுமை விருது: முதல் பரிசு: திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், இரண்டாம் பரிசு-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சணாமூர்த்தி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர்.
முதல்வரின் சிறப்பு விருது: முதல்வரின் சிறப்பு விருதுகள் சேலம் மாவட்ட ஆட்சியர் கே.மகரபூஷணம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வி.சம்பத் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment