நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் "ஒலிசித்திரம்" புதிய தமிழ் படத்தின் தொடக்க விழா, பூஜை நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன், நாயகி, தொழில் நுட்பக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
தமிழ் சினிமா என்றாலே நெல்லை மாவட்டம் கண்டிப்பாக இடம் பெருவது வழக்கம்.
தென்காசி,செங்கோட்டை ,குற்றாலம் ஆகிய மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளை மையம் வைத்து ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
"ஒலிசித்திரம்" எனும் படத்தின் படப் பிடிப்பு அகஸ்திய முனிவரால் வணங்கப்பெற்ற திருவிலஞ்சி குமாரன்கோவிலில் வைத்து சிறப்பு பூஜையோடு படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது.
ஒலிச்சித்திரம்
இப்படத்தினை ஹனி-ஹோனி நிறுவனங்களின் சார்பில் வெங்கடேஷ் -மகேஷ் தயாரிக்கின்றனர்.சிங்காரவேலன்,கிழக்குவாசல்,இதயம்,குரோதம்-2 ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி தமிழகஅரசிடம் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வாங்கிய ஒளிப்பதிவாளர்.ஏ.கே.அப்துல்ரஹ்மான் இந்தப் படத்தை முதன் முதலாக இயக்குகிறார்.
பாலாஜி - காமனாசிங்
கத்தியை தீட்டாதே படத்தில் நடித்த ஆதவாராம்,விளையாடவா படத்தில் நடித்த பாலாஜி, கதாநயகர்களாகநடிக்கின்றனர். பல்வேறு தெலுங்கு படத்தில் நடித்த காமனாசிங்..கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நண்பர்கள் கொடுத்த வாய்ப்பு
இந்த படம் குறித்து பேசிய இயக்குநர், அப்துல் ரகுமான் .என் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து எனது நண்பர்கள் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளனர்.அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றும் விதம் இந்தப்படம் அமையும். தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இந்தப் படம் அமையும் என்றார். அப்போது தொழிலதிபர் இலஞ்சி டி.ஆர்.சினிமா பாலு.ஆகியோர் உடனிருந்தனர். படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது.பாடலுக்கு "சிந்து நதிப் பூ",சேரன் பாண்டியன்,படங்களுக்கு இசைஅமைத்த சவுந்தர்யன் இசை அமைக்கிறார்.ஒளிப்பதிவு வெற்றி,எடிட்டிங்.அணில் மல்னாட்.
பாலச்சந்தர்
நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் முதன் முதலில் இயக்குனர் இமயம் பாலசந்தரின் அச்சமில்லை ....அச்சமில்லை,தண்ணீர்..தண்ணீர்...திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.
பாரதிராஜா - ரஜினிகாந்த்
இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் புதுநெல்லு புது நாத்து படம் நெல்லை மாவட்டத்தில் பாடமாக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் முரட்டுகாளை,கழுகு,கமலின் புன்னகை மன்னன்,சூர்யாவின் வேல்,மற்றும் ஜெயம்,தனுசின் குட்டி படமும் நெல்லை மாவட்ட கிராமங்களில் எடுக்கப்பட்டவைதான்.
முதல்வன் - அந்நியன்
சங்கரின் முதல்வன்,அந்நியன் ஆகிய படங்களில் பாடல்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. அவை வெற்றியும் பெற்றுள்ளன.
நெல்லை சென்டிமென்ட்
தற்போது ஏராளமான திரைப்படங்கள் இந்த பகுதியை மையம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிலப் படங்களின் படப் பிடிப்பு இங்கு நடந்து வருகிறது. அந்தளவுக்கு நெல்லை மாவட்டத்து சென்டிமென்ட் தமிழ் சினிமாவை தலைநிமிர்த்தியுள்ளது.
No comments:
Post a Comment