14.12.13

கோர்ட்டில் ஆள்மாறட்டம் செய்து கையெழுத்திட்டவர் உட்பட 3 பேர் கைது

நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் பெற்ற நபருக்கு மாறாக ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் கையெழுத்து போட்டவர் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
 பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கும் பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பணி நிமிர்த்தமாக தம்பதிகளான கிருஷ்ணசாமியும்,கிருஷ்ணவேணியும் மகாராஷ்டிராமாநிலம் செல்லதிட்டமிட்டனர்.
 இதனால், தங்களிடமிருந்த 15 பவுன் நகையையும், 2 லட்சம் ரூபாய் பணத்தையும் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் உள்ள உறவினர்களான முத்துச்சாமி மற்றும் அவரது மனைவி நாச்சம்மாளிடம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. 6 ஆண்டுகள் கழித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தம்பதிகள் கிருஷ்ணசாமியும், கிருஷ்ணவேணியும் பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி வந்து உறவினர்களான முத்துச்சாமி, நாச்சம்மாளிடம் நகை பணங்களை கேட்டுள்ளனர்.
 ஆனால், முத்துச்சாமி, நாச்சம்மாள் மற்றும் அவரது மகன் வெற்றிவேல் பணம் மற்றும் நகையை தர மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தம்பதிகள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் புகாரை போலீசார் வாங்க மறுத்ததால், பொள்ளாச்சி ஜெ.எம்.1 கோர்ட்டில் கிருஷ்ணவேணி பெட்டிசன் கொடுத்துள்ளனர்.
  இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்குபோலீசார், முத்துச்சாமி, நாச்சம்மாள் அவரது மகன் வெற்றிவேல் மீது வழக்குபதிவு செய்தனர். இதனால், முத்துச்சாமி, நாச்சம்மாள் வெற்றிவேல் ஆகியோர் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று பொள்ளாச்சி ஜெ.எம்.1 கோர்ட்டில் கடந்த 15 நாட்களாக தினசரி கையெழுத்து போட்டுவந்துள்ளனர்.
  இந்நிலையில், வெள்ளிக்கிழமை கோர்ட்டுக்கு வெற்றிவேலுக்கு பதிலாக அவரது அண்ணன் நாகராஜ் சென்று ஆள் மாறாட்டம் செய்து கையெழுத்து போட்டுள்ளார். கோர்ட் ஊழியர்கள் ஆள்மாறட்டம் செய்ததை கண்டறிந்து மாஜிஸ்திரேட் லிங்கத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் தலைமை எழுத்தர் தமிழரசி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு நாகராஜ் மற்றும் முத்துச்சாமி, நாச்சம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment