சென்னையில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.3. கோடி சொத்தை அபகரித்ததாக வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பிóல் கூறப்பட்டதாவது:
சூளைமேடு கான் தெருவைச் சேர்ந்த நடனமணிபாலு மனைவி லலிதா என் லலிதாயோகேஷ்வரி. இவர் கடந்த 5-9-2010 முதல் காணவில்லை. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகினன்றனர். இந்நிலையில் கடந்த 30-8-2010 அன்று கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லலிதா பதிலாக வேறு பெண்ணை காட்டி சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிக்கப்பட்டுள்ளதாக லலிதாவின் சகோதரர் வெங்கட்ராமன் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் புகார் செய்தார்.
அந்தப் புகாரில் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. துணை காவலர் கண்காணிóப்பாளர் எம். பிரபாகரன் மற்றும் போலீஸார் விசாரணை செய்தனர். எழும்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் லலிதாபோல ஆள் மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து, மோசடி செய்து நிலத்தை அபகரித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஜெ.சுரேஷ் ஜெகதீசன், என்.ஆர்.கலைராஜன் ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அதேவேளையில் வழக்கறிஞர் சரவணனிடம் கடந்த 2010ம் ஆண்டு லலிதா காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment