28.12.13

"விவசாயக் கடனுதவிக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்

கர்நாடகத்தில் விவசாயக் கடனுதவி அளிக்க வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, அந்த மாநில அரசுத் தலைமைச் செயலாளர் கெளசிக் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு விதான செüதாவில் நபார்டு வங்கி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:
மாநிலத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநில அரசு மானியங்கள் வழங்கி வருகிறது. விவசாயம் வளர்ச்சி பெற, தேசிய வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்களை வழங்க வேண்டும்.
வங்கிகள் தங்களது மொத்த கடனில் 40 சதத்தை விவசாயத்திற்கு வழங்க வேண்டும். இதுவரை மாநிலத்தில் 37.42 சதம் கடன் விவசாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தேசிய வங்கிகள் விவசாயக் கடனுதவிக்கான விதிகளை தளர்த்த வேண்டும் என்றார் அவர். கருத்தரங்கில் கூடுதல் முதன்மை செயலாளர் வி.உமேஷ், நபார்டு வங்கியின் தலைமை  பொது மேலாளர் சிந்தாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment