தேனி அரசு மருத்துவக்கல்லூரி தினக்கூலி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து கைது செய்யப்பட்டனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆரம்பித்த காலத்தில் சுகாதாரம்,அலுவலக பணிகள் என பல்வேறு பணிகளுக்கு சுமார் 204 பணியாளர்கள் நியமிக்கப்பட்டன.இதில் அவர்களுக்கு தினக்கூலி சம்பளமாக ரூ 33 நியமிக்கப்பட்டு,ஏழு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.இவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு வருகை பதிவேடு வழங்கப்படவில்லை.இதனால் இவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் சில கடந்த மாதம் ஒப்பந்த பணியாளர்கள் 204 பேரை பணிநீக்கம் செய்து உத்திரவிட்டது மருத்துவமனை நிர்வாகம்.இதனை கண்டித்து ஒப்பந்த பணி வழங்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடைபெற்றது.இதனையடுத்து தொழிலாளர்கள்,மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தனியார் நிர்வகம் இனைந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் எவ்வித பேச்சுவார்த்தை தற்போது வரை நடைபெறவில்லை.இதனால் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கூறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை வெள்ளிக்கிழமை காலையில் துவக்கினார்கள்.
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,சிஜடியூ தொழிற்சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.போராட்டம் துவங்கிய 2 மணி நேரத்திற்குள் பேராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என கூறி போலீஸார் அனைவரையும் கைது செய்து க.விலக்கில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.இப்போராட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள் ஆண்கள் 58 பேரும்,பெண்கள் 28 பேரும்,கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேர் என மொத்தம் 87 பேர் கைது பங்கேற்றனர்.பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.
No comments:
Post a Comment