இந்தியாவின் வடமாநிலங்களில் கடுங்குளிர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கார்கிலில் மைனஸ் 15.7 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது. அதன் அருகே உள்ள லே பகுதியில் மைனஸ் 14.8 டிகிரி குளிர் வீசியது.
ஜம்மு காஷ்மீர் மாநில கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகரில் மைனஸ் 0.6 டிகிரியாகவும், பஹல்காம் மலைப்பகுதியில் மைனஸ் 9.6 டிகிரியாகவும் குளிர் பதிவாகியுள்ளது. குல்மார்க் பகுதியில் மைனஸ் 8.6 டிகிரி குளிர் நிலவியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவுவாயிலான காஸிகுண்ட்டில் மைனஸ் 0.2 டிகிரி குளிர் வீசியது. தெற்கு காஷ்மீரிலுள்ள கோகெர்னாக் பகுதியில் மைனஸ் 3 டிகிரி குளிர் பதிவானது. வடக்கு காஷ்மீரிலுள்ள குப்வாரா பகுதியில் மைனஸ் 3.4 டிகிரி குளிர் வீசியது.
ராஜஸ்தானிலும் கடும்குளிர் வீசியது. சுரு பகுதியில் 0.9 டிகிரியாகவும், ஸ்ரீகங்காநகர் பகுதியில் 2.5 டிகிரியாகவும் குளிர் பதிவானது.
அந்த மாநிலத்தின் ஜெய்சால்மரில் 4.6 டிகிரியும், பிலானியில் 7.5 டிகிரியும், பார்மரில் 9 டிகிரியும், சித்தூர்கரில் 10.7 டிகிரியும், கோட்டாவில் 12 டிகிரியும், ஜெய்பூரில் 12.2 டிகிரியும், அஜ்மீரில் 12.3 டிகிரியும் தட்பவெப்பநிலை பதிவானது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் பகுதியில் மைனஸ் 1.2 டிகிரி குளிர் நிலவியது. சண்டீகரில் 3.8 டிகிரியும், ஹரியாணா மாநிலத்தின் ஹிலார் நகரத்தில் 1.7 டிகிரியும், அம்பாலாவில் 5 டிகிரியும், நர்நவுல் பகுதியில் 3.9 டிகிரியும் பிவானியில் 5.4 டிகிரியும் குளிர் பதிவானது.
No comments:
Post a Comment