குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று அகமதாபாத் நடுவண் நீதிமன்றம் ஜாப்ரியின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் குஜராத் கலவரம் குறித்து இதுவரை அதிகம் கருத்து தெரிவிக்கமால் இருந்து வந்த மோடி தற்போது தனது பிளாக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
"சகோதர சகோதரிகளே, உண்மைதான் எப்போதும் வெல்லும் என்பது இயற்கையின் நியதி. வாய்மையே வெல்லும் என்பது நமது நீதித்துறையின் வாதம். என் மனதை பாதித்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த 2001 ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இழப்பும், வருத்தமும் அதிகமாக இருந்தது. அந்த சூழலில் 5 மாதம் கழித்து 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் என்னை வெகுவாக பாதித்தது. அந்தகலவரம் எனக்கு கடும் அதிர்ச்சியளித்ததுடன் நிலைகுலையச்செய்தது.
நெருக்கமானவர்களை இழப்பதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது. எனது அன்புக்குரியவர்களை இழந்தேன், ஒன்றும் அறியாத அப்பாவிகள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் அனாதையாக நின்றனர். இந்த கலவரம் நடந்த போது எனது மனம் வேதனை அடைந்தது. எனது உள்ளம் மிக துயரப்பட்டது, பெரும் கவலையுற்றேன். எத்தனை வார்த்தைகள் கூறினாலும், இந்த உணர்வை தெரிவிக்க முடியாது.
நேற்றைய தீர்ப்பு, நான் சமநிலையில் இருப்பவன் என்பதை உணர்த்தியுள்ளது. எனது மனம் அமைதியடைந்துள்ளது இது சகோதரத்துவத்துக்கும், குஜராத் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. 12 ஆண்டுகள் எரிந்த தீ அணைக்கப்பட்டு விட்டது. நான் சாவுக்கு காரணமான குற்றவாளி என்று விமர்சிக்கப்பட்டேன். அதில் இருந்து விடுபட்டுள்ளேன்.
ஒரு நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு ஒருமைப்பாடு மட்டுமே அடித்தளமாக இருக்கும் என்பதை உணர்ந்து தான், எனது ஒவ்வொரு செயல்பாடுகளும் அமைகின்றன. அனைவரும் இணைந்து பணியாற்றுவதற்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சியை உருவாக்குவோம்" இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment