அரசு சார்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்களா சீரமைப்புப் பணிக்கு கூடுதலாக செலவிட்டதாக புகார் எழுந்த நிலையில், ரூ. 27 லட்சத்தை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் திருப்பிச் செலுத்தியுள்ளார்.
அரசு சார்பில் அந்த மாநில அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட பங்களாவுக்கு கடந்த ஆண்டு செய்த செலவு விவரங்களை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனில் கல்காலி என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
அதில், அமைச்சர்களின் பங்களா சீரமைப்புப் பணி மற்றும் உள்நாட்டு விமானப் பயணத்திற்காக ரூ. 14 கோடி செலவு செய்துள்ளதாக தெரிய வந்தது.
அமைச்சர்களின் பங்களா சீரமைப்புப் பணிக்காகப் அரசு பணம் வீணடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜீத் பவார், தனக்கு தெற்கு மும்பையில் ஒதுக்கப்பட்ட தேவ்கிரி பங்களாவின் சீரமைப்புப் பணிக்கு கூடுதலாக செலவான ரூ. 27 லட்சத்தை பொதுப்பணித் துறைக்கு வெள்ளிக்கிழமை திருப்பிச் செலுத்தினார் என்று அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment