நேபாள எல்லைப் பகுதி வழியாக கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வியாழக்கிழமை வாகன சோதனை மேற்கொண்ட போது ஜெய்ப்பூரில் இருந்து வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அதில் 10 கிலோ எடையுள்ள வைரம் மற்றும் 4 கிலோ எடையுள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கம் மற்றும் வைரம் நேபாள எல்லைப் பகுதி வழியாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment