கர்ப்பிணிகள் பெரும்பாலானோர் இளம் வயதினராகவே இருப்பார்கள். இளம் வயது பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகவும் முக்கியமான பாதிப்பு முகப்பருவாகும். எனவே கர்ப்பம் தொடங்கும் முன்பாகவே பல பெண்களும் 'முகப்பருவிற்காக' சிகிச்சை செய்திருப்பார்கள். இவர்களில் பலரும் மேற்கொள்ளும் முக்கிய சிகிச்சை 'முகப்பருவிற்காக' பல 'கிரீம்களையும்' போட்டுக்கொள்வதாகும்.
இவ்வாறு இவர்கள் போடும் முக கிரீம்களில் 'டிரிடீநாய்ன்' TRETINOIN' மற்றும் 'ஐஸோடிரிடீநாய்ன்' 'ISOTRETINOIN' என்ற பொருள் அடங்கியுள்ளது. இது வைட்டமின் 'ஏ'வான 'ரெட்டினாய்க்' அமிலத்திலிருந்து உருவாக்கப்படுவதாகும்.
இதனால் உருவாக்கப்படும் கிரீம்கள், முகப்பருவைப் போக்கவும், சூரிய ஒளிக்கதிர்களால், தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும் பயன்படும்.
ஆரம்பகாலத்தில் இந்த 'டிரிடீநாய்ன்' கிரீம்களைப் பயன்படுத்துவதால், கர்ப்பிணிகளுக்கு, கருச்சிதைவு, குறைப்பிரசவம் உடலில் பிறவிக் கோளாறுகள் ஆகியவை தோன்றும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த மருந்தினால் கண்டிப்பாக அத்தகைய கோளாறுகள் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நிரூபித்து உள்ளார்கள். எனவே, கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இதன் 'கிரீம்களை' கர்ப்பகாலத்தில் முகப்பருவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்
No comments:
Post a Comment