20.12.13

ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் மலைப் பகுதியில் பிளாட்டின பாறைகள்

ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் அருகேயுள்ள மலைப் பகுதியில் பிளாட்டின பாறைகள் உள்ளதாக, புவிஅறிவியல் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயில் மலைப்பகுதி மற்றும் விருப்பாச்சி, வீரலப்பட்டி அருகே உள்ள மலைப் பகுதிகளில் காணப்படும் பழமையான பாறைகள் குறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 77 பேர் களஆய்வு மற்றும் வரைபடம் தயாரிக்க வந்துள்ளனர்.
  இவர்கள், குழந்தை வேலப்பர் கோயில் மலைப் பகுதியில் உள்ள பாறைகளை ஆய்வு மேற்கொண்டதில், அந்த பாறைகள் நிலவில் காணப்படும் அனார்த்தோசைட் என்ற வகையைச் சேர்ந்த பாறைகள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.
  இந்தப் பாறைகள் உலகம் உருவான காலத்தில் காணப்பட்ட பாறைகள் என்றும், அவை அழியாமல் உள்ளதையும் தெரிவித்தனர். மேலும், இந்தப் பாறையில் பிளாட்டின தாதுப் பொருள்கள் உள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.
   இந்த ஆய்வில், புவிஅறிவியல் துறைத் தலைவர் ஆர்.எஸ். குமார், போராசிரியர்கள் குமரவேல், கணேஷ் ஆகியோர், மாணவர்களுக்கு பழமையான பாறைகள் குறித்தும், களஆய்வு குறித்தும் விளக்கினர்.

No comments:

Post a Comment