கடல் கொள்ளையர்களுக்கு உதவியதாக ஆப்பிரிக்க நாடான டோகோவில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மாலுமி விடுதலை செய்யப்பட்டார்.
"எம்.டி. ஓஷன் செஞ்சுரியன்' என்ற இந்திய எண்ணெய்க் கப்பல் கடல் கொள்ளையர்களால் நடுக்கடலில் தாக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்க அருகிலிருந்த மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் கப்பலை நிறுத்திய அதன் கேப்டன் சுனில் ஜேம்ûஸயும் அவருடன் இருந்த இரு கப்பல் பணியாளர்களையும் கடல் கொள்ளையர்களுக்கு உதவி செய்ததாகக் கூறி டாங்கோ போலீஸார் கடந்த ஜூலை 31-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் சுனில் ஜேம்ஸின் 11 மாத ஆண் குழந்தை விவான் உடல் நலக் குறைவால் இந்த மாதம் 2-ஆம் தேதி இறந்ததையடுத்து, இறுதிச் சடங்குகளை செய்வதற்காக கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று டாங்கோ அரசிடம் இந்தியா கோரியது.
இதனையடுத்து, சுனில் ஜேம்ஸூம், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு மாலுமியான விஜயனும் விடுதலை செய்யப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment