படுக்கையில் சிறுநீர்-கழித்தல் (Bed-Wetting) என்றால் என்ன?
படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது “உறங்கும் வேளைகளில் அவர்களுக்கு தெரியாமலே சிறுநீரைத் தானாக கழித்தலாகும்” என மருத்துவ சமூகம் கூறுகின்றது. இது வழக்கமான ஒரு பழக்கமாகவும் பெரும்பாலும் இரவு வேளைகளில் இடம்பெறுவதாகவும் காணப்படுகிறது. ஆரம்ப வயது பருவத்தினரிடையில் அதாவது சிறுவர்கள், மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. இப் பிரச்சனை பொதுவாக அதிகளவில் காணப்படுகிறது. வயதுவந்த குழந்தைகளுக்கு காலப்போக்கில் இது தானாகவே நின்றுவிடும். இவ்வாறன பிரச்சனைமட்டுமல்லாது சிறுநீர்ப்பாதையில் ஏதும் கிருமிகள் இருந்தால் அல்லது நீரிழிவு நோயின் போதும் இந் நிலை ஏற்படும். இந்நிலை அல்லது வேறு ஏதும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால் அவர்களது நோயைக்கண்டறிந்து படுக்கையில் சிறு நீர் கழிப்பதை தவிப்பதற்கான சிகிச்சையை தொடங்க முன் அவ் ஏனைய வருத்தங்களுக்கு சிகிச்சை அளித்தல் மிக முக்கியமாகும்.
படுக்கையில் சிறுநீர்-கழித்தல் (Bed-Wetting) ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
பின்வரும் காரணங்களால் படுக்கையில் சிறுநீர்-கழித்தல் நிகழ்வுகள் நடைபெறக்கூடும்.
v) அழ்ந்த தூக்கத்தின் போது
v)உறங்கும் முன் அதிகளவான திரவத்தன்மையான பதார்த்தங்களை எடுத்தல்
v)கழிவறையில் இருப்பது போன்ற உணர்வு
v) உணவு ஒவ்வாமை
v) மரவுசார் தன்மை
v) மன அழுத்தம்
v) ஊட்டச்சத்து குறைபாடுகள்
v) உளவியல் ரீதியான பிரச்சணைகள்
v)உறங்கும் முன் அதிகளவான திரவத்தன்மையான பதார்த்தங்களை எடுத்தல்
v)கழிவறையில் இருப்பது போன்ற உணர்வு
v) உணவு ஒவ்வாமை
v) மரவுசார் தன்மை
v) மன அழுத்தம்
v) ஊட்டச்சத்து குறைபாடுகள்
v) உளவியல் ரீதியான பிரச்சணைகள்
ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது சிறுநீர்ப்பை இரவு முழுவதும் அதிகமான சிறுநீரைத் தேக்கிவைக்க போதாதநிலையில் படுக்கையில் தெரியாமலே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகின்றது.
பரிந்துரைகள்
உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருந்தால் எவ்வகையான உணவு ஒவ்வாமை என தெரிந்துகொள்ளவேண்டும். பசுப்பால், கார்பனேற்றப்பட்ட பானங்கள், சொக்கலேட், கோக்கோ, சமைத்த பசளி கீரை, ருபார்ப், நிறமூட்டப்பட்ட உணவு போன்ற உணவுகளைத்தவிர்க்க வேண்டும்.
உறங்குவதற்க்கு 30 நிமிடங்களுக்கிடையில் எதுவிதமான திரவத்தன்மையான பதார்த்தங்களையும் குடிக்கக்கூடாது.
மேலே கூறப்பட்டுள்ள உணவுக்கட்டுப்பாட்டு முறையைப் 1-2 மாதங்கள் வரை பின்பற்றவும் அவ்வாறான நிலையிலும் ஏதும் முன்னேற்றங்கள் இல்லாவிடின் நீங்கள் எங்களது மூலிகை வைத்தியரை நாடுங்கள் அவர் உங்களுக்கு ஏற்றவாறு மூலிகைகள் மூலம் மருத்துவமளிப்பார்.
No comments:
Post a Comment