18.12.13

வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்


மத்திய அரசின், வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை கண்டித்து, வங்கி ஊழியர்கள், இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:-
வங்கி ஊழியர்களின்  ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும். வங்கிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வங்கி சீர்திருத்தத்தை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று, நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. வேலை நிறுத்தத்தை கைவிட, தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன், திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், ஒருநாள் வேலைநிறுத்தும் இன்று நடக்கிறது. என்று தெரிவித்தனர். மேலும்  தமிழகத்தில், ஒன்பது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும், 12 தனியார் வங்கிகளின், கிளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 1 லட்சம் பேர், வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர்.
இதனால், தமிழகத்தில் உள்ள, 8,000 வங்கிக் கிளைகள் இயங்காது. என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment