அச்சிடப்படாமல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் 2015, நவம்பர் 24-ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியாகும் என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயந்திரங்கள் மூலம் அச்சிடப்படாமல் கையால் எழுதியுள்ள பழைய பாஸ்போர்ட்கள் 2015 நவம்பர் 24-ஆம் தேதியுடன் உலக அளவில் காலாவதியாகும் என்று பன்னாட்டு பயணிகள் விமான சேவை அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) அறிவித்துள்ளது.
மேலும், இந்த பாஸ்போர்ட்களுக்கு வெளிநாட்டு அரசுகள் விசா வழங்காததோடு, அந்தந்த நாடுகளில் அனுமதி மறுக்கப்படும். புகைப்படம் ஒட்டப்பட்டு, கையால் எழுதப்பட்ட இந்திய அரசு வழங்கிய பாஸ்போர்ட்கள் இயந்திரம் படிக்க இயலாத பாஸ்போர்ட்கள் என்று கருதப்படும்.
20 ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்களும் இந்த வகையைச் சார்ந்ததாகும். இயந்திரம் படிக்கக் கூடிய பாஸ்போர்ட்களை 2001-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு வழங்கி வருகிறது.
எனவே, பழைய பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் உள்ளூர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் புதிய பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ். ல்ஹள்ள்ல்ர்ழ்ற்ண்ய்க்ண்ஹ. ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ அல்லது தேசிய அழைப்பு மையத்தை 1800-258-1800 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment