நடிகை ஹன்சிகாவின், லக்கி நம்பர் ஒன்பதாம். ரொம்ப நாட்களாக, ரகசியமாக வைத்திருந்த இந்த விஷயத்தை பற்றி, மனம் திறந்துள்ளார், ஹன்சிகா.
படப் பிடிப்புகளுக்காக, பல்வேறு நகரங்களில் உள்ள, ஓட்டல்களில் தங்கும்போது கூட, தான், தங்கும் அறை எண், ஒன்பதாக இருக்க வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கும்அளவுக்கு, ஒன்பதாம் நம்பர் சென்டிமென்ட், அவரை ஆட்டுவிக்கிறது.
இதுகுறித்து, ஹன்சிகா கூறுகையில், உங்களுக்கு, ஒரு விஷயம், ரொம்பவும் ஆச்சர்யமாக இருக்கும். என்னைவிட, என் அம்மா தான், ஒன்பதாம் நம்பரை மிகவும் விரும்புவார்.
ஒன்பதாம் நம்பருக்கும், எனக்கும் உள்ள சென்டிமென்ட் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. நான் பிறக்கும்போதே ஏற்பட்டது. என் பிறந்த தேதி, ஒன்பது தான். பள்ளி, கல்லூரிகளில், என்னுடைய ரோல் நம்பர், ஒன்பதாகவே இருந்தது. எங்கள் வீட்டின் கதவு எண், கார் நம்பரின் கூட்டுத் தொகை என, எல்லாமே, ஒன்பதாம் நம்பர் தான் என்கிறார்.
No comments:
Post a Comment