18.12.13

இந்திய-ஈரான் நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் நடப்பு நிதியாண்டில் இருமடங்கு அதிகரிக்கும் என தகவல்

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தகம் நடப்பு ஆண்டில் இரு மடங்கு அதிகரிக்க உள்ளது என்று இந்திய ஏற்றுமதி  அமைப்பின் சாரிபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதி அமைப்பின் தலைவர் ரஃபீக் அஹமது கூறும் போது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, ஈரானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 73 சதவீதம்  அதிகரித்துள்ளது.  இதன் அடிப்படையில், இவ்வாண்டு, இந்த ஏற்றுமதி இரு மடங்காக, அதாவது 600 கோடி டாலர் அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய வேளாண் பொருட்களுடன், மருந்துகளும் தற்போது ஈரானுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் இடம்பெற்றுள்ளன. 2011-2012இல், 240 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி, 2012-13இல் 336 கோடி டாலராக அதிகரித்ததாக, புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், ஈரானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 245 கோடி டாலர் அளவை எட்டியிருப்பதால், இது இரண்டு மடங்கு அதிகரிக்கு வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment