நான்காவது தலைமுறையாக திரையுலகில் கோலோச்சி வரும் ஏவிஎம் நிறுவனமே குறும்படம், இணையதளங்களுக்கான டெலிபிலிம் என பெரிய திரைக்கு சவால் விடும் சாதனை குறும்படங்களை எடுத்து வரும் சூழலில், புதியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு குறும்படத் தயாரிப்புகளில் கவனம் ஈர்க்கி்ன்றனர்.
அப்படி சமீபத்தில் ‘தோழனோடு இருக்கையில்…’ எனும் பெயரில் நாம் கண்ட படம் மெய்சிலிர்க்க வைத்தது! உறவை காட்டிலும் நட்பே பெரிது எனும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நட்புக்காக, நண்பர்களுக்காக 24 ரிஜிஸ்டர் லவ் மேரேஜ்களை செய்து வைக்கும் ஹீரோ, என்-கவுண்டர் ஸ்பெலிஸ்ட் போலீஸ் ஏ.சி.பி.யின் தங்கையை காதலிக்கிறார்.
இந்தநிலையில் 25-வதாக ஒரு பிரபல ரவுடியின் தங்கைக்கும், நண்பர் ஒருவருக்கும் காதல் திருமணம் செய்து வைக்கிறார். இதனால் வெகுண்டெழும் ரவுடியும், அவரது ஆட்களும் ஹீரோவை துரத்துகின்றனர்.
இதுஒரு பக்கமென்றால் மற்றொரு பக்கம் அந்த ரவுடியை என்-கவுண்டரில் போட்டுத்தள்ள ஹீரோவின் காதலியின் அண்ணனான போலீஸ் ஏ.சி.பி. துரத்துகிறார். ஆனால் போலீஸ் ஏ.சி.பி., ஹீரோ, ஹீரோவின் காமெடி நண்பன் மூவரையும் தன் ஆட்களைவிட்டு தூக்கி வரும் ரவுடி, ஒரே அறையில் பலத்த பாதுகாப்புடன் அடைத்து வைக்கிறார்.
அங்கு தன் புத்திசாலித்தனத்தால் ரவுடியையும், ரவுடியின் ஆட்களையும் பலி கொண்டு, தானும் தப்பித்து, போலீஸ் ஏசிபி-யையும் நண்பனையும் காபந்து செய்கிறார் ஹீரோ! இதைப்பார்த்து மிரண்டு போகும் ஏசிபி, ஹீரோவுக்கு தன் தங்கையையும் கட்டிக் கொடுத்து, போலீஸ் வேலையையும் வாங்கி கொடுப்பதே ‘தோழனோடு இருக்கையில்…’ மொத்த படமும்!
இந்தக்கதையை லவ், ஆக்ஷ்ன், சென்டிமெண்ட், த்ரில் என ஜனரஞ்சகமாக எழுதி, இயக்கி, எடிட்டிங்கும் செய்திருக்கிறார் விஜயகுமார். டி.ஏ.வசந்த இக்குறும்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதோடு பல புதுமைகள் படைத்திருக்கும் ‘தோழனோடு இருக்கையில்…’
குறும்படத்திற்கு இசையும் இனிமையாக அமைத்திருக்கிறார். டி.செந்தில்குமார், வைப்ரன்ட் எஸ்விஎப்எக்ஸ் நிறுவனம் சார்பில் இக்குறும்படத்தை தயாரித்திருக்கிறார் என்பதோடு, மேற்படி மூவருமே உடன் பிறந்த சகோதரர்கள் என்பது ஹைலைட்!
அப்போ உறவைக்காட்டிலும் நட்பே பெரிதும் எனும் கருத்தை உடைய ‘தோழனோடு இருக்கையில்…’ குறும்படத்தில் நட்புக்கு முக்கியத்துவம் ஏன்? நண்பர்களின் பங்கு என்ன? எனக்கேட்டால், இப்படத்திற்கு ஒளி்ப்பதிவாளர் பி.கணேஷ், நடன இயக்குநர் நவீன்ராஜ், எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் சந்திரகுமார், கே.வினோ அனு கே மற்றும் தயாரிப்பில் இணைந்திருக்கும் சி.எம்.கமல் எல்லோரும் எங்களது நல்ல தோழர்கள்…
அவர்களது ஒத்துழைப்புடன் ‘தோழனோடு இருக்கையில்… குறும்படத்தை திரைப்படாக தயாரிக்கும் முயற்சியிலும் இருக்கிறோம் என்று கோரஸாக கூறுகின்றனர் சகோதர்கள்.
உறவும் – நட்பும் பக்க(கா)பலமாக உடன் இருந்ததென்றால் எதுவும் முடியும்!!
No comments:
Post a Comment