வேறொரு நிறுவனத்தின் பெயரில் புகைபோக்கி தயாரித்து விற்பனை செய்ததாக இளைஞர் ஒருவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சி.பெரியசாமி (53). இவர் அதே பகுதியில் தொழில்சாலைகளில் பயன்படுத்தப்படும் புகைபோக்கியை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். 2005-ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.
இங்கு தயாரிக்கப்படும் புகைபோக்கி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவரது நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியை சேர்ந்த சரவணன் (43), விற்பனை பிரதிநிதியாக 2011-ல் பணியில் சேர்ந்தார். சரியாக பணியாற்றததால் பணியில் இருந்து 2013-ல் நிறுத்தப்பட்டுவிட்டாராம்.
இந்நிலையில், இதே நிறுவனத்தின் பெயரில் புகைபோக்கியை தயாரித்து விற்பனை செய்து வந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த பெரியசாமி, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் புகார் அளித்தார். தனது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி புகைபோக்கிகளை விற்பனை செய்ததால் தனது நிறுவனத்துக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் புகார் அளித்தார்.
இது குறித்து ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரவணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்
No comments:
Post a Comment