பாணா காத்தாடியில் அறிமுகமான அதர்வா, பாலா இயக்கத்தில் நடித்த பரதேசியில் நடித்து தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதைத் தொடர்ந்தும் அந்த மாதிரியான வலுவான கதைகளாகவே தேடி வந்ததால் அடுத்தபடியாக அவருக்கு படங்கள் கிடைக்க சிறிது காலதாமதம் ஆனது.
அதனால் பல மாத இடைவெளிக்குப்பிறகு இப்போது இரும்புக்குதிரை என்ற படத்தில் நடித்துள்ளார். வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான கதையமைப்பில் இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லும் அதர்வா, அடுத்தடுத்து விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட ஸ்கிரிப்டுகளில் நடித்து தனது ரேஞ்சை உயர்த்திக்கொள்ளும் திட்டத்துடன் இப்போது ஈட்டி என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் தடகள விளையாட்டு வீரராக நடிக்கும் அதர்வா, தனது பாடி லாங்குவேஜையும் முற்றிலுமாக மாற்றியுள்ளார். மேலும், வெறும் விளையாட்டை மட்டுமே மையப்படுத்தாமல் விளையாட்டுத்துறையில் இந்தியா இன்னமும் பின்தங்கியிருப்பதற்கான சில காரணங்களையும் கதையோடு சொல்கிறார்களாம். அதனால் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இப்படம் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment