23.12.13

இலங்கையில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு: மாஜிஸ்திரேட் விசாரணை இன்று தொடக்கம்

இலங்கையில் எலும்புக் கூடுகளின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை திங்கள்கிழமை தொடங்க உள்ளது.
இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறுகையில், "தேசிய குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்கள் மன்னாரில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதியில் மேலும் 4 மண்டை ஓடுகள் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டன. இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை திங்கள்கிழமை தொடங்க உள்ளது' என்று தெரிவித்தார்.
இது குறித்து மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்சி கூறுகையில், "கண்டறியப்பட்ட எலும்புக் கூடுகளின் சிதிலங்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுடையவை. அவர்கள், 1987-90-ம் ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் தொடர்பாக இந்தியா தலையிட்டதை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு உயிரிழந்தனர்' என்று தெரிவித்தனர். இதேபோன்று, மாத்தளை மாவட்டத்தில் சுடுகாடு ஒன்று கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment