23.12.13

பழனி வனப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு

பழனி வனப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
   பழனி வனப்பகுதி சுமார் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.  இங்கு, புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, காட்டெருமை, குரங்கு, மான் மற்றும் ஏராளமான பறவைகள், சிறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தேசிய புலிகள் ஆணையத்தின் உத்தரவின்பேரில், பழனி வனப்பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 23 ஆம் தேதி வரை, புலிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.
  இது குறித்து, ரேஞ்சர் கணேசன் தெரிவித்ததாவது:
பழனி வனப்பகுதி பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட 11 பீட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புலி கணக்கெடுப்புப் பணிக்காக 22 வன அலுவலர்களோடு, 22 தன்னார்வலர்களும் சேர்ந்து 44 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   இவர்கள் 11 பீட்டுகளிலும் தலா 4 பேர் என பணிகளை மேற்கொள்கின்றனர். கணக்கெடுப்பின்போது, புலி மட்டுமின்றி மற்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். வனவிலங்குகளின் கால்தடம், எச்சம், மரங்களில் ஏற்படுத்தியுள்ள தடயங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்களைக் கொண்டு, அவற்றின் எண்ணிக்கை கணக்கிடப்படும் எனத் தெரித்தார்.
  பழனி வனப்பகுதியில் வேட்டை கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மான், காட்டுமாடு, யானை, குரங்கு உள்ளிட்டவை எண்ணிக்கையில் அதிகமாகியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment