23.12.13

கொடைக்கானலில் கடுமையான பனிப் பொழிவு

கொடைக்கானலில் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருவதால் நீரோடைகளில் வரத்து குறைந்துள்ளது. குளிரால் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்பு அடைந்துள்ளது.
 கொடைக்கானலில் டிசம்பர் மாதத்தில் பனிப் பொழிவு நிலவுவது வழக்கம். இந்தாண்டும் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக பனிப் பொழிவு நிலவி வருகிறது.
காலை 8 மணி முதல் நல்ல வெயில் அடிக்கிறது. மாலை 5 மணி முதல் பனி தொடங்குகிறது. இரவு முதல் மறுநாள் காலை 8 மணி வரை பனிப் பொழிவு இருக்கிறது.
 ஏரிச்சாலை, பூங்கா பகுதி, வட்டக்கானல், அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் பனி படர்ந்துள்ளது. பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிரையண்ட் பூங்காவில் பூக்கள் கருகியுள்ளன.
சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள நர்சரி நிழல் வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீரோடைப் பகுதிகளான வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர்சோழா அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி ஆகியவற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது.  பனியில் நீர்ப்பனி, வரப்பனி, மூடுபனி என வகைகள் உள்ளன. தற்போது வரப்பனியின் தாக்கம் அதிகரித்திருப்பதால் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது.

No comments:

Post a Comment