15.12.13

திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத கட்சியுடன் கூட்டணி: கருணாநிதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கருணாநிதியின் சுயவரலாற்று நூலான

மக்களவைத் தேர்தலில், திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதியின் சுயசரிதை நூலான "நெஞ்சுக்கு நீதி' 6-ஆம் பாகம் வெளியீóட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் முதல் நூலை வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில் கருணாநிதி பேசியது:
ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ள திமுகவின் பொதுக்குழுவில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை சிந்தித்துச் செயலாற்றுவோம். எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்; எந்தக் கட்சியுடன் சேரமாட்டோம் என்பதை கடந்த கால அனுபவத்தில் நியாயமாக சிந்தித்துப் பார்த்து நீங்களே (திமுகவினர்) முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது எந்த அணியோடு கூட்டணி அமைப்போம் என்று கேட்காதீர்கள். அது பிணியாகி விடும். ஆனால், நாம் கூட்டணி அமைக்கும் அணி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத அணியாக இருக்கும் என்பதை மட்டும் கூறுகிறேன்.
அந்த அணியைப் பலப்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை விளக்கி, தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் டிச.21-ஆம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு வேண்டுகோள்: தற்போது உள்ள இளைஞர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு திமுக என்ன செய்தது என்று கேட்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஒன்றை மட்டும் சொல்கிறேன். திமுக ஆட்சி இதுவரை 3 முறை கலைப்பட்டது.
ஒவ்வொரு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறியே கலைக்கப்பட்டது என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது திமுக ஆட்சியைக் கலைத்தனர். அப்படிக் கலைக்க அவரை யாரெல்லாம் தூண்டினர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.
காங்கிரஸýடன் கூட்டணி: திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத கட்சியுடனே அணி அமைப்போம் என்று கூறியதை, காங்கிரûஸத்தான் மறைமுகமாக கருணாநிதி குறிப்பிட்டதாகக் கூட்டத்துக்கு வந்த திமுகவினர் பெரும்பாலானோர் கூறினர். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சும் அமைந்தது.
திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் சிறுவயதில் கருணாநிதியும் அவர் நண்பர் தென்னனும் நீந்தி களித்தனர்.
பாதி தூரத்துக்கு மேல் நீந்த முடியாமல் திரும்பிவிடலாம் என்று தென்னன் கூறினார். ஆனால் திரும்ப வேண்டாம் என்று கூறி எதிர்நீச்சல்போட்டு கருணாநிதி கரை சேர்ந்தார். கமலாலயத்தை அன்றே கருணாநிதி கடந்தவர் என்று அழுத்தம் கொடுத்துப் பேசினார்.
கமலம் என்றால் தாமரை. அது பாஜக சின்னத்தைக் குறிக்கக்கூடியது. பாஜகவின் அலையைக் கருணாநிதி கடப்பார் என்பதேயே வைரமுத்து இவ்வாறு குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸýடன் கூட்டணி என்று கருணாநிதி மறைமுகமாகக் கூறினாலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே திமுகவினரின் கருத்தாக உள்ளது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நடிகர் விஜயகுமார், நடிகை குஷ்பு உள்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வரவேற்றார். திருமகள் பதிப்பக உரிமையாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment