தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாதி புயல், வலுவிழந்து தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை கரையைக் கடந்தது. இது தமிழக நிலப்பரப்பைக் கடந்து, லட்சத் தீவுகளுக்கு அருகில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலை கொண்டுள்ளது.
இந்த நிலையில் பருவமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் குன்னூர், பரமத்தி வேலூரில் 40 மி.மீ. மழையும், கோத்தகிரி, கொடைக்கானலில் 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
நாமக்கல், பெரியகுளம், ராஜபாளையம், ராசிபுரம், கேட்டி (20 மி.மீ.), தம்மம்பட்டி, போடிநாயக்கனூர், பாபநாசம், வாடிப்பட்டி, பெருந்துறை, வாழப்பாடி, திருச்செங்கோடு (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment