வடகொரியாவின் முக்கிய அரசியல் தலைவரான ஜங் சாங் தேக்குக்கு மரணதண்டனை நிறைவேற்றிய அந்நாட்டின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இதுபோன்ற கோபமூட்டும் செயல்களில் இனியும் ஈடுபட வேண்டாம் என்று வடகொரியாவை எச்சரித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தால் அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆசிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா கலந்தாலோசிக்க உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறுவுத் துறை செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ஃப் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வடகொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து நாங்கள் கவலை கொண்டோம். இது போன்ற கோபமூட்டும் நடவடிக்கைகளில் மேலும் ஈடுபட வேண்டாம் என்று நாங்கள் அந்நாட்டை வலியுறுத்துகிறோம்.
வடகொரியாவின் இத்தகைய கோபமூட்டும் செயல்களுக்கு எதிராக ராணுவக் கண்காணிப்பை அதிகரிக்க தென்கொரியாவின் ராணுவத் தலைமை தளபதி கிம் க்வான் ஜின் உறுதியேற்றுள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment