புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்கும் த்ரிஷாவுக்கு சம்பளம் ரூ 25 லட்சம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா முதல் முறையாக கன்னடத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளியான தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் அவர், அந்தப் படத்தின் சம்பளமாக ரூ 1 கோடி வரை கேட்டுள்ளார்.
ஆனால் கன்னடத்தில் ஒரு படத்தின் பட்ஜெட்டே அவ்வளவுதான். எனவே த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் நடிக்க ரூ.20 லட்சம் சம்பளம் பேசினர்.
கன்னடப் பட உலகில் தன் மார்க்கெட் மதிப்பு அதிகமாக வேண்டும் என்றால் முதல் படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனவே ரூ 25 லட்சத்துக்கு நடிக்க ஒப்புக் கொண்டாராம் த்ரிஷா.
திரையுலகுக்கு வந்து பத்து ஆண்டுகளானாலும், இப்போதுதான் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கிறார்.
மலையாளத்தில் இதே சம்பளத்தில் இரு ஆண்டுகளுக்கு நடிக்க த்ரிஷாவை அழைத்திருந்தார் இயக்குநர் ப்ளெஸ்ஸி. ஆனால் அப்போது சம்பளம் குறைவு என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment