பிரிட்டன் நாட்டுக்காக, ஈரானை உளவு பார்த்ததாகக் கூறி ஒரு நபரை ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
பல மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்த அவர், தென்கிழக்கு ஈரானிலுள்ள கெர்மன் நகரத்தில் கைது செய்யப்பட்டதாக சனிக்கிழமை அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நாட்டு உளவு அமைப்பினர் 4 பேருடன், அந்த நபர் தகவல்களைப் பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அவ்வப்போது அயல்நாட்டவர்கள் மீது குற்றம்சாட்டி அவர்களைக் கைது செய்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டின் அணு செறிவூட்டும் பகுதியில் பாராகிளைடிங் முறையில் பறந்த ஸ்லோவாக் நாட்டைச் சேர்ந்த 8 பேரை ஈரான் அதிகாரிகள் கைது செய்து, பின்னர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment