ஊழலை எதிர்க்க இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இதற்கென வாழும் கலை மையத்தில் ஊழலுக்கு எதிரான குழு ஏற்படுத்த தயாராக இருப்பதாக அதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
மதுரையில் வாழும் கலை மையம் சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற பக்தர்களுடனான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
வன்முறை, பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு மதுப்பழக்கம் தான் முக்கியக் காரணம். மதுவிலக்கை அமல்படுத்துவதும், மதுவால் தீய செயல்களுக்கு அடிமையானவர்களுக்கு தியானப் பயிற்சியின் மூலம் மன மாற்றத்தை ஏற்படுத்துவதும் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமானது. அடுத்ததாக, ஊழல் என்பது வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக இருக்கிறது. இவற்றையெல்லாம் இளைஞர்கள் எதிர்க்க வேண்டும். ஊழலுக்கு எதிராக இளைஞர் ஒன்றிணைந்தால், அதற்கென தனிப் பிரிவை வாழும் கலை மையம் ஏற்படுத்தும் என்றார்.
No comments:
Post a Comment