15.12.13

சந்திரனில் தரையிறங்கியது சீன விண்கலம்

கடந்த 12 நாள்களுக்கு முன்பு சீனா அனுப்பிய "சேங்-இ-3' விண்கலம் சனிக்கிழமை இரவு 9.11 மணியளவில் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்த விண்கலம், எவ்வித சேதத்துக்கும் உள்ளாகாமல் மென்மையாகத் தரையிறங்கியது. இது சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதற்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் சந்திரனில் நவீனத் தொழில்நுட்பத்துடன் விண்கலத்தை தரையிறக்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியன் நாடும் இதேபோல் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி சேதமில்லாமல் தரையிறக்கியுள்ளன.
"சமமான பகுதியை கண்டறிந்து விண்கலத்துக்கு சேதம் ஏற்படாமல் "சேங்-இ-3' அதன் நான்கு கால்களையும் நீட்டி மெதுவாக தரையிறங்கியது' என்று பெய்ஜிங் விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. "சேங்-இ-3' விண்கலம் சந்திரனின் புவி அமைப்பு, இயற்கை வளங்கள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளது.

No comments:

Post a Comment