இந்த ஆண்டில் மட்டும் தனது அமைதிப்படையைச் சேர்ந்த 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைதிப்படையின் தலைவர் ஹெர்வ் லாட்சூஸ், இந்த ஆண்டுக்கான அறிக்கையை செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கி கூறியதாவது:
இந்த ஆண்டில் மட்டும் ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் திட்டமிட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர். 14 பேர் சூடான் நாட்டின் டார்ஃபர் மாகாணத்தில் கொல்லப்பட்டனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூனிடம் சிரியா அரசு வேண்டுகோள் விடுத்தால், அந்த நாட்டில் அமைதியை நிலைநாட்ட எங்களது படை தயாராக உள்ளது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் பணியிலிருந்து வெளியேறியுள்ள சில நாட்டு படைகளை, மற்ற அமைதிகாப்புப் பணிகளுக்கு வரவேற்கிறோம் என்றார் லாட்சூஸ்.
No comments:
Post a Comment