சிங்கப்பூரின் "லிட்டில் இந்தியா' பகுதியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக மேலும் இரு இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த "லிட்டில் இந்தியா' பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து நிகழ்ந்ததில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து தெற்காசிய குடியேற்றத் தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். குதிரை பந்தயச் சாலையில் போஸீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை மேலும் 2 இந்தியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. இவ்வழக்கில் சிக்கியுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்நாட்டின் சட்டப்படி 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment