15.12.13

பெங்களூரு விமான நிலையத்துக்கு கெம்பே கெளடா பெயர் சூட்டல்

பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்துக்கு பெயர் சூட்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெங்களூரு தேவனஹள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெங்களூரு மாநகரை நிர்மாணித்த கெம்பே கெüடாவின் பெயரைச் சூட்டி  நாட்டுக்கு அர்ப்பணித்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
விழாவில் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய வளாகத்தை திறந்துவைத்து மத்திய விமானத் துறை அமைச்சர் அஜித் சிங் பேசியது:
நகரங்களின் வளர்ச்சியை மேம்படுத்த ரயில், விமான சேவைகளை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய கொள்கையை வகுத்து வருகிறது. வளர்ந்த நகரங்களில் குறைந்த செலவில் விமான நிலையங்களை கட்டவும் அரசு ஆலோசித்து வருகிறது. கெம்பே கெüடா பன்னாட்டு விமான நிலையம் மிகவும் அழகாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பேசியது:
கெம்பே கெüடா பிறந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இந்த விமானநிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விமான நிலையத்தின் முன் கெம்பே கெüடா சிலையை நிறுவ வேண்டும் என்றார் அவர்.
முதல்வர் சித்தராமையா பேசியது:
பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்திற்கு கெம்பே கெüடா பெயரை சூட்டியுள்ளது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். இந்த நிகழ்வை பொன்னெழுத்தால் எழுத வேண்டும்.
மக்களின் நீண்டகால கனவு இதன்மூலம் நிறைவேறியுள்ளது. இந்த விமான நிலையம் அமைக்க 4,300 ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயிகளின் தியாகத்தையும் இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும்.
விமான நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.  விமான நிலையம் முன் கெம்பே கெüடாவுக்கு சிலை அமைக்கப்படும் என்றார் அவர்.
விழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ரகுமான்கான், மத்திய விமானத் துறை இணையமைச்சர் கே.சி.வேணுகோபால், கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, உள் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், வேளாண்மைத் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெüடா, தகவல், உயிரித் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment