15.12.13

சிக்மகளூரில் டிச.19 முதல் தேசிய கார் பந்தயம்

கர்நாடக மாநிலம், சிக்மகளூரில் வருகிற 19-ஆம் தேதி முதல் காபிடே தேசிய கார் பந்தயம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை காபிடே ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஷ், செய்தியாளர்களிடம் கூறியது:
சிக்மகளூர் மோட்டார் விளையாட்டுச் சங்கத்துடன் இணைந்து காபிடே நிறுவனம் சிக்மகளூரில் வருகிற 19-ஆம் தேதி முதல் தேசிய கார் பந்தயத்தை நடத்துகிறது. இதில் 41 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் போட்டிக்கு இந்திய மோட்டார் விளையாட்டுச் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. 281.20 கி.மீ. தொலைவை போட்டியாளர்கள் கடக்க வேண்டும். சிக்மகளூரில் உள்ள ஆம்பெர் வேலி ரெசிடென்சியல் பள்ளி வளாகத்தில் மாலை 3 மணியளவில் இந்தப் பந்தயம் தொடங்கும்.
மோட்டார் விளையாட்டுகளில் இந்தியா சிறப்பிடம் பிடிக்க வேண்டும் எனபதே எங்கள் நோக்கம். அதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கவே இந்தப் போட்டிகள் நடக்கின்றன.  போட்டியை காண 7 ஆயிரம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர். பேட்டியின் போது, அதன் சங்கத் துணைத் தலைவர் ஃபரூக் அகமது, வோல்வேகன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனத் தலைவர் பிரித்விராஜ் சித்தப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment