15.12.13

வியத்நாமில் 5 பேருக்கு மரண தண்டனை

வியத்நாமில் போதைப்பொருள் கடத்திய 4 பெண்கள் உள்பட, 5 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
""லாவோஸ் நாட்டிலிருந்து வியத்நாமிற்கு 89 கிலோ ஹெராயினை கடத்த முற்பட்ட 6 பேர் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் என்கே மாகாண நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்'' என்று வியத்நாமிலிருந்து வெளிவரும் "தான் நீன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளை, 2011ஆம் ஆண்டு முதல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் விஷ ஊசி போட்டு கொல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டியலில் 700 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment