22.12.13

அமெரிக்க தூதரகத்தில் சோதனை நடத்த வேண்டும்


அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் என்ற பெயரில் பலர் உலவி வருகின்றனர். அதனால், அமெரிக்கத் தூதரகத்தில் முழுமையான சோதனை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறுவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராஞ்சியில் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
"அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் என்ற அந்தஸ்தில் இல்லாத பலர், அதற்கான அடையாள அட்டைகளுடன் வலம் வருகின்றனர். அதனால், தூதரகத்தை சோதனை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவயானி கோப்ரகடேவை கைவிலங்கிட்டு கைது செய்ததும் ஆடையைக் களைந்து சோதனை செய்ததும் கடும் கண்டனத்துக்குரியது.
சர்வதேச உறவுகள் சிறக்க, இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா திரும்பப் பெற மறுத்து விட்டது.
தேவயானி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியா பலவீனமான தேசம் என்று சர்வதேச சமூகம் நினைக்கும்' என்று தெரிவித்தார்.
சமீபத்தில், பிரேசிலில் அமெரிக்கா உளவு பார்த்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை பிரேசில் அதிபர் ரத்து செய்ததை சின்ஹா சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment