ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் வெத்து வேட்டு. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்வதின் மூலம் ஆதாயம் அடையப் பார்க்கிறார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இதுகுறித்து அவர் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பாஜக ஒரு மதவாதக் கட்சி. அதன் ஆதரவாளர் நரேந்திர மோடி என்று சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் திங்கள்கிழமை கூறியுள்ளார்.
மோடியை விமர்சனம் செய்வது தற்போதைய அரசியல் போக்காக உள்ளது. அதனால், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் மோடியைப் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது லாலு பிரசாத் யாதவும் இணைந்துள்ளார் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
No comments:
Post a Comment